Monday, December 25, 2006

விளைவைச் சரிபார்

வாழ்க வளமுடன்

நாள்தோறும் நினைவில்

விளைவைச் சரிபார்

தரத்தை அளவிடு
முடிவைத் தொகு
ஆராய்ச்சி மேற்கொள்
எல்லையை முடிவுசெய்
தெளிவு காண்
முடிவுகளை வெளிப்படுத்து
இடைவெளியை அறி
மாற்றத்திற்கு வழியமை
செயல்முறையை மாற்று
திட்டத்தை மேம்படுத்து

சங்கர்சுடர்

உள்ளத்தை வெளிப்படுத்து

வாழ்க வளமுடன்

நாள்தோறும் நினைவில்

உள்ளத்தை வெளிப்படுத்து

கதை சொல்
கவிதை இயற்று
கட்டுரை வரை
பேசிப் பழகு
நடித்து மகிழ்
நாட்டியம் ஆடு
ஓவியம் தீட்டு
சிலை வடி
பாட்டுப் பாடு
கடிதம் எழுது

சங்கர்சுடர்

வெளி உலகை உள்வாங்கு

வாழ்க வளமுடன்

நாள்தோறும் நினைவில்

வெளி உலகை உள்வாங்கு

பல மொழி கல்
சமூக அறிவியலை அறி
பல தொழில் பயில்
அறிவியலைத் தெரிந்துகொள்
பொது அறிவைப் பெறு
நிர்வாகத்தை கற்றுக்கொள்
ஐம்புலங்களில் உணர்
நடு நிலையோடு ஏற்றுக்கொள்
பொழுதுபோக்கில் இன்புறு
துறவுநிலை நில்

சங்கர்சுடர்

ஒன்றி வேலைசெய்

வாழ்க வளமுடன்

நாள்தோறும் நினைவில்

ஒன்றி வேலைசெய்

ஈடுபாட்டுடன் பணிசெய்
விதிமுறைகளைக் கடைபிடி
நேரத்தோடு இணைந்து செல்
பாதுகாப்புடன் வேலைசெய்
விளைவுகளைக் கவனத்தில் வை
சமுதாயப் பங்கைஅளி
கடமையில் கண்ணாயிரு
வேலையில் நிறைவுகாண்
நுட்பங்களைக் கற்றுக்கொள்
நுட்பங்களைக் கற்பி
ஐந்தொழில் செய்

சங்கர்சுடர்

ஆதாரங்களைப் பயன்கொள்

வாழ்க வளமுடன்

நாள்தோறும் நினைவில்

ஆதாரங்களைப் பயன்கொள்

இடத்தைச் சுருக்கு
ஆற்றலைச் சேகரி
பொருட்களை பாதுகாக்க
கருவிகளைக் கையாள்
இயந்திரங்களை இயக்கு
கட்டுப்பாட்டை வடிவமை
மென்பொருள் எழுது
செயல்முறையை நிறுவு
உயிர்களுக்கு உதவு
செய்திகளைப் பரிமாறு

சங்கர்சுடர்

உறவைக் கட்டு

வாழ்க வளமுடன்

நாள்தோறும் நினைவில்

உறவைக் கட்டு

சம உரிமைகொடு
வயதை மதித்து நட
நட்புடன் பழகு
கட்டளை தவிர்
விமர்சனத்தை விலக்கு
உடனிருப்போரை ஏற்றுக்கொள்
அறம் செய்
இளையோருக்கு எடுத்துக்காட்டாகு
விட்டுக்கொடுத்து வாழ்
தியாக உணர்வு கொள்

சங்கர்சுடர்

மனத்தை வளப்படுத்து

வாழ்க வளமுடன்

நாள்தோறும் நினைவில்

மனத்தை வளப்படுத்து

தியானம் செய்
கவலை ஒழி
அறுகுணம் சீரமை
நினைவாற்றலை அதிகப்படுத்து
உயர்ந்த நோக்கம் கொள்
அறிவுத் தெளிவுபெறு
திறனை வளர்
தன்னம்பிக்கை வை
தற்சோதனை செய்
வேண்டுதலை விடு

சங்கர்சுடர்

வாழ்வைத் திட்டமிடு

வாழ்க வளமுடன்

நாள்தோறும் நினைவில்

வாழ்வைத் திட்டமிடு

முக்கியத்துவத்தை அறி
உயர்ந்த குறிக்கோள் கொள்
அனுபவத்தைச் சேகரி
வாழ்வை வடிவமை
கால்வரை திட்டமிடு
நேரத்தைப் பகிர்ந்துகொள்
கலந்து முடிவு செய்
திட்டத்தை நிரல்படுத்து
முடிவுகளைப் பரப்புக
விளைவுகளைக் கணி
தொலை நோக்கு பார்வைகொள்

சங்கர்சுடர்

உடலைப் பேணு

வாழ்க வளமுடன்

நாள்தோறும் நினைவில்

உடலைப் பேணு

உடற்பயிற்சி செய்
தூய்மையாக இரு
அளவோடு உண்
தட்பவெப்ப பாதுகாப்பு பெறு
பொருள்படைக்க உழை
உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வை
இயற்கையொடு இணைந்து வாழ்
நோய்க் குறிகளை அறி
மருத்துவத்தின் துணைகொள்
ஆழ்ந்து உறங்கு

சங்கர்சுடர்

நாள்தோறும் நினைவில்

Sunday, November 19, 2006

ஞானியின் சன்னிதியில்

ஞானியின் சன்னிதியில் ...
சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களுடன் உரையாடல்
தமிழாக்கம் ---- மரபின் மைந்தன் ம.முத்தையா
படித்த காலம் - 2006 அக்டோபர் 30 - 2006 நவம்பர் 10
உள்ளடக்கம் -- ஏழு தலைப்புகளில் கருத்தாழம் உள்ள பேச்சு.
1. அருள்
-மனம் -- சேகரிக்கும் தன்மை கொண்டது
---------- சமுதாயத்தின் குப்பைத் தொட்டி

2. திரை விலகுகிறது
-அலெக்சாண்டர் ஒரு முட்டாள்.
-"நான் மாறத் தயாராக இருக்கிறேன்" - இந்த உணர்வு உங்களுக்கு ஏற்பட்டால் பிறகு எல்லாமே மாறும்.

3. அக விடுதலை
-ஆணும் பெண்ணும் சமம்.
-உங்கள் சிந்தனையை குழந்தைகளின் மீது திணிக்காதீர்.
-கடவுள் உண்டு அல்லது இல்லை என்று நம்பினாலும், நம்பாவிட்டாலும் அவற்றால் எந்த பயனும் இல்லை. எனக்குத் தெரியாது என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டால்தான் ஒரு தேடுதல் உங்களுக்குள் துவங்கும்.
-பணம் படைத்த கலாச்சாரத்தின் மேம்போக்கான வாழ்க்கைமுறையைப் பின்பற்றினால், இந்தியக் கலாச்சாரத்தின் சூட்சுமமான தன்மைகளை இழந்து வருந்த நேரிடும்.

4. மதங்களும் நல்லிணக்கமும்
-உள்நிலை அனுபவத்தை ஒரு நம்பிக்கையாக அணுகாமல் ஒரு அறிவியலாக தொடங்குங்கள்.
-இந்த உலகுக்கு நீங்கள் செய்யப்போகும் மிகப்பெரிய நன்மையே ஒரு ஆனந்தமான மனிதராக இருப்பதுதான்.

5. வழி
-உயிர்கள் ஒவ்வொன்றும் தெய்வீகத்திற்கான விதை.
-ஆன்மீகத்தை நீங்கள் செய்யமுடியாது. இது ஏற்பட அனுமதிக்க வேண்டும்.
-உடல், மனம், உணர்ச்சி, சக்திநிலை தாண்டி விரிவடையுங்கள்.
-கல்வி என்பது கரைந்து போவதற்கான ஒரு வழி.

6. குருவின் திருவடியில்
-3 மாத தீவிர முழுமைப்பயிற்சி
-முழுமையான மனிதர் யார்?
--உறுதியானவரா?
--தெளிந்த மனம் - சிந்தனை வாய்த்தவரா?
--அமைதி கண்டவரா?
--தனக்குள் மகிழ்ச்சியை அனுபவிப்பவரா?
--தளைகளில் இருந்து விடுதலையானவரா?

7. கவிதை

மொத்தத்தில் நூல் அருமையாக இருந்தது. ஏற்கனவே வேதாத்திரி, மகரிஷி மற்றும் விவேகானந்தர் போன்றோரைப் படித்திருப்பதால் புரிதல் நன்றாக அமைந்தது. எனக்குள் நல்ல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த பாதிப்பே இதை எழுதத்தூண்டியது.

நல்ல ஆன்மீகப் பெரியோர்கள் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது மகிழ்ச்சியான ஒன்று.
அனைவரின் கருத்துகளையும் நமதாக்கிக் கொண்டு உயர்வோம்.

வாழ்க வளமுடன்.